அஜித்துடன் இணையும் அமிதாப் பச்சன்

அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அண்மையில் அட்லியை நேரில் வரவழைத்து பேசிய அஜித், தனக்கேற்ற கதை இருக்குமாறு கேட்டதாகவும், அதன்பிறகு அட்லி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும், அந்த கதையில் நடிக்க அஜித் விரும்பியதாகவும் கூறப்பட்டது.

amitabh-bachchan-joint-with-ajith-after-20-years_SECVPF

இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கெனவே 1996-ஆம் ஆண்டு தமிழில் அஜித்-விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘உல்லாசம்’ படத்தை தயாரித்துள்ளார்.

அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு, தமிழில் எந்த படமும் தயாரிக்காத அமிதாப் பச்சன், 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் படம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts