என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இப்படத்தை முடித்தவுடன் அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டுவிட்டரில் ரசிகர்கள் அவரை விடாமல் இதுப்பற்றி கேட்டதற்கு ‘இந்த வதந்தியை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஆனால், என் அடுத்த படம் பற்றி நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று டுவிட் செய்துள்ளார்.
தற்போது அனேகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் பிஸியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.