அஜித்துக்கு ‘வில்லன்’ பிரசன்னாவா? அரவிந்த் சாமியா?

அஜீத் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘ஏகே 57’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க அரவிந்த் சாமி, பிரசன்னா இருவருக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ajith-prasanna-aravind

சிறுத்தை சிவா-அஜீத் இருவரும் 3 வது முறையாக ‘ஏகே57’ படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இப்படத்தில் அஜீத்திற்கு வில்லனாக பிரசன்னா மற்றும் அரவிந்த் சாமி இருவரிடமும் படக்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்திற்கு வில்லனாக நடித்த அருண் விஜய் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது வேடம் மிகவும் பேசப்பட்டதுடன் அதற்காக பல விருதுகளையும் அருண் விஜய் வென்றார்.

அதேபோல இப்படத்திலும் வில்லன் வேடத்தை வலுவாக அமைத்திருக்கிறார்களாம். இதனால் பிரசன்னா, அரவிந்த் சாமி இருவரும் வில்லன்களாக நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு கருதுகிறதாம்.

தற்போதைய நிலவரப்படி பிரசன்னா இப்படத்தில் வில்லனாக நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஹீரோயின், வில்லன் என முழுவிவரங்களையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அஞ்சாதே’ படத்தில் பிரசன்னாவும், ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமியும் தங்கள் வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Posts