அஜித்துக்கு மாரடைப்பு : திரையுலகில் பரபரப்பு!!!

அஜித்தின் உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

ajith-new

அஜித் நடித்து வரும் படங்கள், படங்களின் பெயர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுபவர் சுரேஷ் சந்திரா. இவருடைய ட்விட்டர் தளத்தை SCREENSHOT எடுத்து போட்டோ ஷாப் மூலமாக மாற்றி “அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்” என்று மாற்றி வாட்ஸ்-அப் மூலமாக பரப்பினார்கள்.

அந்த புகைப்படம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

Related Posts