அஜித்துக்கு பிரியாணி செய்ய சொல்லிக் கொடுத்தது யார் தெரியுமா?

தனது அனைத்துப் படப்பிடிப்புகளிலும் சுவையான பிரியாணி செய்து தரும் ‘தல’ அஜித்குமாருக்கு,பிரியாணி சமைக்க சொல்லித் தந்தவர் ஒரு இயக்குநர்.

????????? ??.?????? ???? ?????, ???????
இயக்குனர் கே.சுபாஷ் தனது மனைவி, மகளுடன்

தற்போது அஜித் எந்த படத்தில் நடித்தாலும் படத்தின் இயக்குநர் முதல் லைட் மேன் வரை ஒரு முறையாவது தன் கையினால் பிரியாணி சமைத்து போட்டுவிடுவார்.அவரின் கை மணத்தில் உருவாகும் ருசியான பிரியாணியை பல கலைஞர்கள் புகழந்து தள்ளியிருக்கின்றனர்.ஆனால் இவ்வளவு ருசியாக பிரியாணி சமைக்கும் கலையை அஜித்திற்கு கற்றுத் தந்தவர் இயக்குநர் சுபாஷ் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

காலம் சென்ற இயக்குநர்களான கிருஷ்ணன் – பஞ்சு ஆகியோரில் இயக்குநர் கிருஷ்ணனின் மகனாக பிறந்தவர் கே.சுபாஷ்.மணி ரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர்,விஜயகாந்த் நடித்த ’சத்ரியன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த காலத்தில் தமிழ் திரையுலகில் நல்ல தொடக்கம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த அஜித்தை வைத்து பவித்ரா,நேசம் ஆகிய படங்களை இயக்கி அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்தான் இயக்குநர் கே.சுபாஷ்.பவித்ரா படத்தில் அஜித் நடிக்கும் போது,பல்வேறு வகையான அசைவ உணவுகளை சமைப்பது குறித்து அவருக்கு கற்றுக் கொடுத்ததும் இயக்குநர் சுபாஷ்தான்.அன்று சுபாஷிடம் கற்ற கலையைத்தான் ,இன்று தனது படப்பிடிப்புத் தளங்களில் வெளிப்படுத்தி அஜித் பாரட்டை அள்ளிவருகிறார்.

பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் கே.சுபாஷ், சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts