அஜித்துக்கு ஜோடியாக சாய்பல்லவி

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவும், அஜித்தும் மீண்டும் இணையும் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. வழக்கம்போல் அஜித்குமார் அந்த பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மானேஜர் மட்டும் பூஜையில் கலந்து கொண்டார்.

ajith

வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்ட பிறகு டைட்டிலை அறிவிக்கலாம் என்று சொல்லிவிட்டாராம் அஜித். அதற்கு முன் அவரது ரசிகர்கள் தல 57 என்று அப்படத்தை குறிப்பிட்டனர். அஜித் தரப்போ, ‘AK57’ என்பதையே அதிகாரபூர்வமான தற்காலிகப்பெயராக அறிவித்தது. சமுகவலைத்தளங்களிலும் ‘AK57’ என்பதை பிரபலப்படுத்த உள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்! இப்படத்தின் மற்றொரு கதாநாயகியாக ‘பிரேமம்’ பட நாயகி சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது. என்ன காரணத்தினாலோ, காஜல் அகர்வால், சாய் பல்லவி குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலையும் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் இது வரை வெளியிடாமல் இருக்கிறார்.

Related Posts