அஜித் தற்போது மகன் பிறந்த சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக காத்திருந்தார்.
அதற்குள் சிவா படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் வந்த தகவலின் படி Sinus பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு சென்னையின் பிரபல மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டு இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அஜித் நன்றாக உள்ளார் என கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர் எழுந்து வர வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.