அஜித்தின் 57ல் யார் ஹீரோயின்??

அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தப்படங்கள் வீரம் மற்றும் வேதாளம். தற்போது அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க இருக்கிறார் சிறுத்தை சிவா. இது அஜித்தின் 57வது படம் என்பதுடன், அஜித்-சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் ஹாட்ரி்க் படமாகும்.

தல 57படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இந்தபடத்தின் படப்பிடிப்பு உள்ளுர் மற்றும் சில வெளி நாடுகளில் நடத்த இருக்கிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் தொடங்கப்படும் என கூறகிறார்கள். இந்தபடத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளனர்.

ஆளுமா டோளுமா பாடலை இசையமைத்த அனிருத் இப்படத்திலும் இசையமைப்பாளராக இறுதி செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் மீண்டும் ஹீரோயினாக திரிஷா மற்றும் அனுஷ்கா அஜித்துக்கு ஜோடியாக நடிக்க போவதாக வந்த செய்தி தவறு என்றார் இயக்குனர் சிவா.

அஜித் 57வது படத்தில் தமன்னா மற்றும் கிருதி கர்பண்டா இருவரும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக இயக்குனர் சிவா கூறி உள்ளார்.

இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இப்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஒருவராக இருக்கிறார்.ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படத்தில் கிருதி கர்பண்டா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

Related Posts