அஜித்தின் 55-வது படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் வெளியானது.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.
முன்னதாக, படத்தின் தலைப்பு அக்.30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அது போலவே, சரியாக 12:00AM மணிக்கு படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியானது முதல், #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக் மற்றும் #Thala55 என்ற ஹேஷ்டேக் ஆகியவை இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.