‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அஜித்துக்கு 56-வது படமாகும். சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கெனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இந்த புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பின்னி மில்லில் தொடங்குவதாக இருந்தது. பின்னர் அஜித்தின் சென்டிமென்ட் நாளான வியாழக்கிழமை (இன்று) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித், நடிக்கும் ஒவ்வொரு படத்தின் பூஜை, படப்பிடிப்பு தொடங்கும் நாள் மற்றும் படம் வெளியாகும் நாள் என அனைத்தும் வியாழக்கிழமையில்தான் நடைபெறும். அந்த வகையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பையும் வியாழக்கிழமைக்கு (இன்று) மாற்றியுள்ளார்.