அஜித்தின் சிக்ஸ் பேக் காட்சிக்கு இசையமைத்தது குறித்து மனம் திறந்த அனிருத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் மற்றும் `விவேகம்’ படம் குறித்து அப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், சில ருசீகர தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், `வேதாளம்’ படத்திற்கு பிறகு பல அறுவைசிகிச்சைகளை மேற்கொண்ட அஜித், விவேகம் படத்திற்காக தனது உடலை வருத்தி கட்டுக்கோப்பான உடலுக்கு மாறியுள்ளார்.

விவேகம் படத்தில் அஜித்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்ப, புதுமையான முறையில் இசையமைத்துள்ளதாக அனிருத் தெரிவித்தார். குறிப்பாக தல அவரது கட்டுக்கோப்பான சிக்ஸ் பேக் உடலை காட்டும் ஒரு காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த காட்சியில் வரும் பின்னணி இசை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றார்.

மேலும் `விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் பிரபல ஹிப் ஹாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விவேகம்’ படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தல பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மார்ச் 2-வது வாரத்தில் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் அஜித்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Related Posts