அஜித்தின் அடுத்த பட வேலைகள் தொடங்கியது!

ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் (வீரம் தவிர) ஆகிய படங்களில் நடித்த அஜித், அடுத்தபடியாக பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கும் சோழர் காலத்து கதையில் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வீரம், வேதாளம் என சிவா இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட்டாக அமைந்ததால் தான் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பினையும் சிவாவிற்கே கொடுத்துள்ளார் அஜித்.

மேலும், அஜித் நடித்த 3 படங்களை தொடர்ச்சியாக ஏ.எம்.ரத்னம் தயாரித்த நிலையில், அஜித்தின் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்ட பட்ஜெட் டில் தயாரிக்கிறது. தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் முடிசூடா மன்னன் படத்தை தயாரித்து வரும் இந்நிறுவனம், அஜித் படத்தை தொடங்க இன்னும் சில மாதங்கள் இருந்தபோதும் இப்போதே அதற்கான லொகேசன்கள், நடிகர் நடிகை களை தேர்வு செய்யும் வேலைகளையும் தற்போது முடுக்கிவிட்டிருக்கிறது. முக்கியமாக, அப்படத்துக்காக அதிக டயம் எடுத்துக்கொள்ளாமல் சில மாதங்களிலேயே படத்தை எடுத்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Related Posts