அஜித்தின் அடுத்த செண்டிமென்ட்!

சமீபகாலமாக சில விசயங்களை செண்டிமென்டாக கடைபிடித்து வருகிறார் அஜித். அதில் வியாழக்கிழமை முக்கியமானது. தான் நடிக்கிற படங்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர் வியாழக்கிழமைகளில் தான் ஆரம்பித்து வருகிறார். அது அவருக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து வருவதால், அதே வியாழக்கிழமை செண்டிமென்ட் தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வரும் 57-வது படத்திலும் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே தற்போது இன்னொரு செண்டிமென்டும் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் அஜித். அதாவது, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படமான வீரம், வி என்ற ஆங்கில எழுத்தில்தான் தொடங்கியது. அதேபோல் வேதாளமும் வி-யில்தான் தொடங்கியது. அதனால் தற்போது மீண் டும் சிவாவுடன் தான் கூட்டணி வைத்துள்ள 57வது படத்திற்கும் வி -என்ற எழுத்தில் தொடங்கும் டைட்டீல் வைக்குமாறு கூறியுள்ளாராம் அஜித். அதனால் வி-யில் தனக்கு தோன்றும் தலைப்புகளை தற்போது பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கியிருக்கிறாராம் டைரக்டர் சிவா. அதில் இருந்து ஒரு தலைப்பை செலக்ட் பண்ணி டிசம்பர் மாதம் பர்ஸ்ட் லுக்கோடு அறிவிக்கப்போகிறார்களாம்.

Related Posts