அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இம்மாதம் 28 ஆம் திகதி திறக்கப்படும்!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முதற்கட்ட செயற்பாடுகள் இம்மாதம் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்தவைக்கப்படவுள்ளது.

இந்த முதற்கட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் எட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன்மூலம் 7000 பேர் நேரடி தொழில்வாய்ப்பு பெறவுள்ளனர்.

Achchuveley

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் 1970 ஆம் ஆண்டு 65 ஏக்கரில் இந்த கைத்தொழில் பேட்டை அரம்பிக்கப்பட்டு 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கின. எனினும் யுத்தம் காரணமாக 1980 ஆம் ஆண்டு அனைத்தும் மூடப்பட்டன.

64 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த பேட்டையின் மீள் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 17 கோடியே 50 லட்சம் ரூபா நிதி உதவியினை வழங்கியுள்ளது.

இது தவிர இலங்கை அரசாங்கம் இரண்டு கோடி 50 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலாவது கட்ட அபிவிருத்தி பணியின் போது 24 ஏக்கர் விஸ்தீரணமான காணிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
வீதி நிர்மாணம், குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதார மேம்பாடு உட்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் வழங்குகின்றது.

250 கம்பனிகள் இங்கு தொழிற்சாலைகளை அமைக்க கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு விண்ணப்பித்துள்ளதாக சபையின் பிரதி ஆணையாளர் நாயகம் பிரியங்கா ரத்னமலால் தெரிவித்துள்ளார்.

Related Posts