அச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு

அச்சுவேலி பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களது காணியில் ஒரு பகுதி காணி நேற்று விடுவிக்கப்பட்டது.

அச்சுவேலி இராச வீதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் 1.5 ஏக்கர் காணியே நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் அச்சுவேலி இராச வீதியில் பொது மக்களது காணிகள் 3 ஏக்கரை கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவற்றில் 1.5 ஏக்கர் காணி இராணுவத்தால் மீள கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய 1.5 ஏக்கர் காணிகளும் இவ் ஆண்டின் இறுதிக்குள் கையளிக்கப்படும் என இராணுவ தரப்பானது தெரிவித்துள்ளது.

Related Posts