அச்சுறுத்தலினாலேயே மருத்துவ பீட கற்றல் முன்னெடுக்கப்படுகின்றது: எம்.பி சிறிதரன்

யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் கல்விச் செயற்பாட்டினை புறக்கணிக்கும் நிலையில் மருத்துவ பீடம் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வது அச்சுறுத்தலின் காரணமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் விடுவிக்கக் கோரி யாழ் நகரில் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரத த்தின் போது இதனை சுட்டிக் காட்டினார்.
அதேவேளை, பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் தாக்கப்பட்டதுடன், விடுதியில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தததைக கண்டித்து மகளீர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வரவில்லை என்றும் இதன் போது சுட்டிக் காட்டினார்.

அத்துடன், எமது பிள்ளைகளின் கல்வியை அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாகவும், இராணுவம் குறைப்பு என்று சொல்லும் அரசாங்கம் மேலும் இராணுவத்தினரை யாழ். மாவட்டத்தில் குவிப்பபதாகவும், இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Related Posts