அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி வெளியானது?

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படத்தை ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்தனர்.

சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் ‘தள்ளிப் போகாதே’ பாடலை படம்பிடிக்க முடியாத கவுதம் மேனன் தனது அடுத்த பட வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் சிம்பு-கவுதம் மேனன் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆகஸ்ட் 19ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தள்ளிப் போகாதே பாடல் இல்லாமல் படம் வெளியாகும் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படத்தின் மிகப்பெரிய பலமே அப்பாடல்தான் என்பதால், பாடலை எப்படியும் ஷூட் செய்துவிடுவார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts