‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள் ரெடி

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. கடந்த வருடம் கௌதம் மேனன் இயக்கி அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த எதிர்பார்ப்பை விட இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கான மொத்தப் பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம். நேற்று கௌதம் மேனன் பிறந்த நாள் என்பதால் அவருக்கு படத்தின் பாடல்களை பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரகுமான்.

simbu

“அனைத்துப் பாடல்களும் முடிந்து என் கையில் உள்ளது. உருவான மொத்தப் பாடல்களையும் முழுவதுமாகப் பெற்றது வெளிப்படையாக ஒரு நல்ல நாள். ஏ.ஆர்.ரகுமான் சார் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி,” என கௌதம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்து வழக்கம் போல் இளம் ரசிகர்களை மயக்கிக் கொண்டிருக்கின்றன. அதிலும் கௌதம் மேனன் முதலில் வெளியிட்ட சிங்கிள் டிராக்கான ‘தள்ளிப் போகாதே…’ பாடல் யு டியூபில் 50 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்துள்ளது. மிச்சமிருக்கும் பாடல்களையும் ரகுமான் முழுவதுமாக இசையமைத்துக் கொடுத்துவிட்டதால், இனி அந்தப் பாடல்களைப் படமாக்கியபின் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய வாய்ப்புள்ளது. அதற்குள் படத்தின் இசை வெளியீட்டையும் நடத்தி முடித்து விடுவார்கள். கோடை விடுமுறையில் இப்படம் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாகவே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts