அச்சமின்றி, அப்பா ஒரே கதை?

ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடித்துள்ள அச்சமின்றி படம் டிசம்பர் 30 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அச்சமின்றி படத்தின் கதையும் சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது. குறிப்பாக நாமக்கல் பள்ளிகளில் நடைபெறும் கொடுமை இரண்டு படங்களிலும் இடம்பெற்றுள்ளது.

அச்சமின்றி படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவருவது தாமதமானது. அதனால் அந்த விஷயம் பெரிதாக தெரியவில்லை. இத்தனைக்கும் அப்பா படத்தை இயக்கி நடித்த சமுத்திரக்கனியே அச்சமின்றி படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts