பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவந்தது.
ஆட்சியுரிமை (விஷேட ஏற்பாடுகள்) எனப்படும் இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது.
இந்த சட்ட மூலம் தொடர்பிலான விவாதம் கட்சி தலைவர்கள் தீர்மானிக்கும் ஒரு திகதியில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் காரணமாக பலர் தமது காணிகளின் உரிமையை நிலைநாட்ட முடியாது போயிற்று. அந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினையில் சிக்கிகொண்டவர்களுக்கு அவர்களின் (காணி வீடு) உரிமைகளை இந்த சட்டத்தின் மூலம் மீளப்பெற்று கொடுக்கும் .
வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக தமது காணிகளை கைவிட்ட பலர் உள்ளனர். இவர்களால் அந்த காலப்பாகுதியில் தமது சொத்துகள் இருந்த இடத்துக்கு போக முடியாமையாலும் தமது உரிமைகளை கோர முடியவில்லை.
சாதாரண சட்டத்தின் படி குறிப்பிட்ட காலமாக ஒருவர் தனது சொத்துக்களை பயன்படுத்தாது விடுவாராயின் அவர் தமது சொத்துக்களை இழந்துவிடுவார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பயங்கரவாதம் காரணமாக தமது சொத்துக்களை பயன்படுத்த முடியாது போனவர்களுக்கு மேற்படி சாதாரண சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படும். இதனால், இவர்கள் தாம் இல்லாத காலத்தில் தமது காணிகளை பிடித்து வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.