பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் என வெளியான தகவல் பொய்யானது என இக்பால் தெரிவித்துள்ளார்.
இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இஸ்லாமிய கலாச்சார உடையான ஹபாயா அணிந்திருந்தமையால் அதை கலட்டிவிட்டு உள்நுழையுமாறு உரிமையாளர் எச்சரிக்க அவர் உணவகத்தை விட்டு வெளியேறும் வேளையிலேயே அசிட் வீசப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதன் காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கட் போட்டித்தொடரில் விளையாடிக்கொண்டிருந்த இக்பால் இடையில் போட்டியை விட்டு விலகி நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த தகவல் பொய்யானது என இக்பால் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.