அசாத் சாலி குற்றத்தை ஒப்புக்கொண்டார்? கைது குறித்து அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை!- கோத்தபாய

Koththapaya-rajaகொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தென் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வி அளித்ததாக அசாத் சாலி மீது புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்து அசாத் சாலி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த ஊடகத்திற்கு அளித்த செவ்வி வருத்தமளிப்பதாகவும், சில விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அசாத் சாலியை விடுதலை செய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை ஜனாதிபதி உகண்டா விஜயம் செய்ய உள்ளதனால் அதற்கு முன்னதாக அசாத் சாலி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதனை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் இளைஞர்களை ஆயுதப் போராட்டமொன்றை நோக்கி நகர்த்துவது குறித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சில அரசியல்வாதிகள், அசாத் சாலி எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற பின்னணியை அறிந்து கொள்ளாது கருத்து வெளியிடுகின்றனர்.

புலிகளுடனான போரினால் 30 ஆண்டுகள் மக்கள் துன்பங்களை அனுபவித்ததாகவும், மீண்டும் அவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுவேன் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts