நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 110 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் 153 ஆயிரத்து 382 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சுமார் 4800 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும், 109 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 18 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.