அசா­தா­ரண கால­நிலை தொடரும்! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான கால ­நிலை தொடரும் என கால­நிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது. நாட்டின் பெரும்­பா­லான பகு­திகளில் பனி­மூட்­டத்­துடன் மழை­வீ­ழ்ச்சி காணப்­படும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

அதே போன்று நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் சில நேரங்­களில் கடும் காற்று ஏற்­படும் எனவும் மலைப்­பாங்­கான பகு­தி­களில் அதிக மழை பெய்­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­வ­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

சில பிர­தே­சங்­களில் மழை­வீழ்ச்சி 100 மில்லி மீற்றர் வரை எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தோடு, மத்­திய, சப்­ர­க­முவ, மேற்கு, வட மேற்கு, ஊவா மற்றும் வட மத்­திய மாகா­ணங்­க­ளிலும் அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­களில் எதிர்­வரும் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மிக அதி­க­மான மழை வீழ்ச்­சி­யாக 150 மில்லி மீற்றர் வரை எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மின்னல் மற்றும் இடி­யுடன் கூடிய கால­நிலை நிலவும் பிர­தே­சத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சார­தி­க­ளுக்­கான அறி­வு­றுத்தல்

மேலும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நெடுஞ்­சா­லையில் வாக­னங்­களை செலுத்­துவோர் அதிக கவனம் செலுத்த வேண்­டு­மென சார­தி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுத்­துள்­ளது.

குறிப்­பாக சீரற்ற கால­நி­லை­யினால் அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் அதிக விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ளன. சார­திகள் எச்­ச­ரிக்­கை­யுடன் வாக­னங்­களை செலுத்தி விபத்­துக்­களை குறைத்­து­க்கொள்­ளு­மாறு போக்­கு­ வ­ரத்து பொலிஸார் கேட்­டு­க் கொண்­டுள்­ள னர்.

அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் மணித்­தி­யா­ல­த்­திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்தில் வாக­னங்­களை செலுத்­து­மாறு கேட்டு கொண்­டுள்­ள­துடன் இரண்டு வாக­னங்­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெளியை 2 மீற்­ற­ராக வைத்­து­க் கொள்ள வேண்டும் என அதி­வேக நெடுஞ்­சாலை தகவல் பிரிவு அறி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மத்­திய, வடமத்­திய, சப்­ர­க­முவ, மேற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்­களில் காலி, மாத்­தறை, அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் 24 மணித்­தி­யா­லங்­களில் 150 மில்லி மீற்­ற­ருக்கும் அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வா­கி­ய­துடன் சில பிர­தே­சங்­களில் 100 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யி­ருந்­தது.

மேலும் நாட்டை சூழ­வுள்ள கடல் பிராந்­தி­யங்­களில் காற்றின் வேக­மா­னது மணித்­தி­யா­லத்­துக்கு 30 –- 40 கிலோமீற்றர் வரை காணப்­பட்­ட­தோடு வட கடல் பிர­தே­சங்­களில் புத்­தளம் தொடக்கம் மன்னார் காங்­கேசன்துறை ஊடாக திரு­கோ­ண­மலை வரை­யான கடல் பகு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­திற்கு 70 -– 80 கிலோ மீற்றர் வரை காணப்­பட்­டது.

இவ்­வா­றான சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் சில பகு­தி­களில் மண்­ச­ரிவு மற்றும் வெள்ள அனர்த்­தங்­களும் பதி­வா­கின.

கடும் மழை கார­ண­மாக கம்­பளை தொழுவை உட பலாத்த பிரதேச சபை க்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்த மையால் 10 குடும்பத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஹட்டன் வில்ப்ரட் பிரதேசத் திலும் மண்சரிவினால் வீடு ஒன்று சேத மடைந்துள்ளது. கடும் மழை காரணமாக ராவனா ஆற்றின் நீர் மட்டமும் அதிகரித் திருந்தது.

Related Posts