அசத்தும் மாஸ் சூர்யா

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கலக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் சில யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

soorya

ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைல், இரண்டுநாள் தாடி மீசை, கூலிங்கிளாஸ், காதில் ஸ்டட் என சூர்யாவின் தோற்றம் கலக்கலாக உள்ளது. அவர் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸில் ரூபாயின் சின்னம் பிரதிபலிக்கிறது.

மங்காத்தாவில் அஜீத் செய்தது போன்று கொஞ்சம் நெகடிவ் ரோலா சூர்யாவுக்கு என்ற சந்தேகத்தை இந்த போஸ்டர் எழுப்பியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கும் மாஸில் சூர்யாவுக்கு இரு வேடங்கள். நயன்தாரா, ப்ரணித்தா நடிக்கின்றனர். யுவன் இசை. சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக படம் தயாராகிறது.

Related Posts