தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (ஒக்.20) கொழும்பில் இடம் பெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய நான்கு பிரதான அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழ் மக்களின் ஜனநாயக சமவுரிமை, பாதிக்கப்பட்டோருக்கான முன்னுரிமை, தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சி, வடக்கு மண்ணின் துரித மீள் எழுச்சி ஆகிய நான்கு விடயங்களை முன்னிலைப் படுத்திக் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்றைய தினம் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது- என்றுள்ளது.