அங்கஜனுக்கு மேலும் ஒரு மாத கால விடுமுறை

aygajan-ramanathanவட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு வட மாகாண சபையினால் மேலும் ஒரு மாத காலம் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்குமாறு வட மாகாண சபையிடம் மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளதாக தவிசாளர் கந்தையா சிவஞானம் சபையில் இன்று தெரிவித்தார்.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. சொந்த விடயம் காரணமாக மேலும் ஒரு மாத காலத்திற்கு விடுமுறை வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கு சபையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமையினால் அவருக்கு ஒரு மாத கால விடுமுறை வழங்க சபை அனுமதியளித்தது. கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் டிசெம்பர் 7ஆம் திகதி வரை இராமநாதன் அங்கஜன் விடுமுறை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts