அக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்து வருகிறார். மேலும் இதில் சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

29-lingaa-motion-capture-350x262

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினி இரண்டு விதமான கெட்-அப்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் மாதம் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவை பிரம்மாண்டமாகவும் சிறப்பு விருந்தனர்களாக பல முன்னணி நடிகர்களை அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Related Posts