மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அகுரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது ஆதரவாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் கையினைப் பிடிக்க முற்பட்ட போது, மஹிந்த அவரை தாக்குவதற்கு சென்றுள்ளதாகவும், இதன்போது மஹிந்தவின் பாதுகாவலர்கள் அவரை சுற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும், எதற்காக மஹிந்த உண்மையில் ஆதரவாளரைத் தகாக்ச் சென்றார் என்ற காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவிற்கு எதிராக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியினர் கடும் பிரசாரங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் மஹிந்தவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் மஹிந்த தன்னுடைய அமைச்சர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அண்மையில்கூட சுசில் பிமேமஜெயந்தவிற்கு மஹிந்த கன்னத்தில் அறைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.