அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மர்மமுடிச்சு எனும் இந்த நாடகத்தை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் பு.கணேசராஜா நெறியாள்கை செய்திருந்தார்.
இதேவேளை தேசிய ரீதியாக கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டியில் ஸ்கந்த வரோதயக் கல்லூரியின் நாடகம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்டப் போட்டி கடந்த 20 ம் திகதி ஶ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது.