அகில இலங்கை பாடசாலை சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்து மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வீராங்கனைகளுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

kokuvil-hindu-

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான 36 கிலோமீற்றர் தூர சைக்கிள் ஓட்டப் போட்டியில் நிர்மலேஸ்வரன் விதுசனா கலந்துகொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

பாடசாலை மட்டத்தில் இடம் பெற்ற போட்டி ஒன்றில் முதல் தடவையாக யாழ். மாவட்ட பாடசாலை மாணவி ஒருவர் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts