அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் சண் தயாளன் சம்பியன்!

நுவரெலியாவில் நடைபெற்ற 2015 ம் ஆண்டுக்கான அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கு கொண்ட உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் அவர்கள் இரண்டு தங்கப்பதங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கதையும் வென்று  சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார்.

இவர் யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவனும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமாவார். சிறந்த துடுப்பாட்ட,  உதைப்பந்தாட்ட வீரரும் மத்தியஸ்தருமாகிய இவர் கல்லுாரிக்காலத்தில் மைதான நிகழ்வுகளில் சாதனைகளை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sun

Related Posts