அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட கிளை அங்குரார்ப்பணம்

srilanka-general-employees-unionவடமாகாண ஊடகவியலாளருக்கான பாதுகாப்பு, கண்ணியத்துவம், நலன்பேணல் தொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய தீர்மானத்துடனும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதை அரசு உடன் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட கிளை அங்குரார்ப்பண பொதுக் கூட்டம் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நெற்றயதினம் யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, 12 தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிர்வாக தெரிவுகளும் இடம்பெற்றன.

அத்தீர்மானங்களாவன: வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கடமைபுரியும் தற்காலிக நாட்சம்பள ஊழியர்களுக்கு பொது நிர்வாக சுற்றறிக்கையிற்கு அமைவாக 180 நாட்கள் தொடர்ச்சியாக சேவையாற்றியிருப்பின் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், உள்ளூராட்சி மன்ற ஊழியர்களுக்கு வடமாகாண ஆளுநரின் அனுமதியுடன் 2011.01.21ஆம் திகதி வெளியிடப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்களது பதவிகளின் திட்டம் அமைவாக காலம் தாழ்த்தாது பதவி உயர்வு வகுப்பு ii,i வழங்கப்பட வேண்டும்.

வடமாகாண இணைந்த சேவை சார்ந்த ஊழியர்களுக்குரிய (அ.ப.சேவை) பதவி உயர்வு வகுப்பு ii, அ.வ.இல 1258/20 அமைவாக வழங்கப்பட வேண்டும், அலுவலக பணியாளர்கள் சேவை சார்ந்த ஊழியர்களுக்குரிய சேவைப்பிரமாணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அ.வ.இல 1777/35 திருத்தம் செய்யப்படல் வேண்டுமென அரசைக் கோரல், இச்சேவைப்பிரமாணம் தொடர்பில் வகுப்பு iii இருந்து வகுப்பு ii பெறுவதற்கு 10 வருடம் சேவைக்காலம் கோரப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக திருத்தம் செய்யப்பட்டு அ.வ.இல 1258/20 குறிப்பிடப்பட்ட 06 வருடம் தொடர்ந்து அமுலில் இருக்க அரசைக் கோரல்.

வாழ்க்கைப்படி அலவன்ஸ் அதிகரிக்கப்படல், அத்துடன், 391 நாட் சம்பளமும் அதிகரிக்கப்படல், அலவன்ஸ் தொகை 5850 ரூபாவினை அடிப்படையில் மாதாந்த வேதனத்தில் சேர்த்தல், சிறுபான்மை மக்கள் அவர்களது உரிமைகளை பெற்று வாழ்வதற்கு அரசு ஆக்க பூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். புரையோடிபோயுள்ள இனப்பிரச்சினையை மாநில சுயாட்சி மூலம் தீர்வு வழங்க அரசைக் கோரல், சிறுபான்மை மக்களினது அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு அரசியல் உரிமைகள் மதச்சுதந்திரம் போன்றவற்றின் மீது அரசு கூடுதல் கவனமெடுத்து உதவவேண்டுமென அரசைக் கோரல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பிரதிகளும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும், வடமாகாண ஆளுநர், உட்பட பலருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு உதவியை புரிந்த பிரதி நிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் உட்பட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க உறுப்பினர்கள் மற்றும், அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts