படத்துக்குப் படம் தன்னுடைய படத்தின் பிசினஸை அதிகரித்துக்கொண்டே போகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் வசூல் 50 கோடியை தாண்டியதால் தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 60 கோடிக்குக் குறைவாக கொடுக்க மாட்டேன் என்கிறாராம். இந்தப் படம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் செய்யும் என்று திடமாக நம்புகிறாராம் சிவகார்த்திகேயன். அதனால் ரெமோ படத்தை அடுத்து ஜெயம்ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் 80 கோடி என்று இப்போதே முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து ஜூலை மாதம் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்கள் கொடுத்த கூட்டணி என்பதால் இப்படத்தின் தியேட்டரிகல் டைரட்ஸ் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறாராம்.
இப்படியே தன் படத்தின் விலையை அதிகரித்துக்கொண்டே போனால் ஒருகட்டத்தில் அதுவே ஆபத்தாகி சிவகார்த்திகேயனுக்கு சிக்கலை ஏற்படுத்தப்போகிறது என்கின்றனர் திரையுகில் உள்ள அனுபவஸ்தர்கள். இன்னொரு பக்கம் படத்துக்குப் படம் விலையைக் கூட்டிக் கொண்டுபோவதை எண்ணி விநியோகஸ்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.