அகதிகள் முகாமில் இருந்த இலங்கைப் பெண் மாயம்

தமிழகத்தின் மானா மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் நிரோஷா (21 வயது). இவர் மானாமதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்ற நிரோஷா வீடு திரும்பவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மானாமதுரை காவல் நிலையத்தில் ரவி புகார் செய்தார் என தமிழக ஊடகமான தினமணி கூறியுள்ளது.

இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிந்து நிரோஷாவை தேடி வருகின்றனர்.

Related Posts