Ad Widget

ஃபேஸ்புக்கை லாக் அவுட் செய்யாமல் சென்றதால் பிடிபட்ட திருடன்!

facebook-crimeஅமெரிக்காவில் உள்ள Minnesota என்ற மாகாணத்தை சேர்ந்த Dakota County என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட வந்த திருடன் ஃபேஸ்புக்கால் மாட்டிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள Dakota County நகரில் 26 வயது நிகோலஸ் என்பவன் ஜேமஸ்வுட் என்பவரின் வீட்டில் திருட சென்றுள்ளான். ஜேம்ஸ்வுட் வைத்திருந்த பணம், கிரெடி கார்டு, விலையுயர்ந்த துணிகள் போன்றவற்றை திருடிய பின்னர் அந்த வீட்டை விட்டு கிளம்பும் முன், கம்ப்யூட்டரை பார்த்துள்ளான். உடனே அவனுக்கு தனது ஃபேஸ்புக்கை ஓபன் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

திருடிய பொருட்களை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தை ஒபன் செய்து சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் பலவித ஸ்டேட்டஸ் போட்டுள்ளான். பின்னர் அரைமணி நேரம் கழித்து தான் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். ஆனால் அவன் செல்வதற்கு முன்னர் அவன் உபயோகப்படுத்திய கம்ப்யூட்டரில் ஃபேஸ்புக்கை லாக் அவுட் செய்ய மறந்துவிட்டான்.

வீட்டு உரிமையாளர் ஜேம்ஸ்வுட் தனது வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.தனது பொருட்கள் எல்லாம் திருடு போனதை அறிந்து உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து சோதனை செய்தபோது கம்ப்யூட்டர் ஆன் நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை சோதனை செய்தபோது திருடனின் ஃபேஸ்புக் லாக் அவுட் செய்யமல் இருந்தது. அதில் இருந்து அந்த திருடனின் போன் நம்பரை கண்டுபிடித்து பின்னர் அவனது வீட்டிற்கு சென்று அதிரடியாக கைது செய்தனர். திருடன் நிகோலஸ் ஃபேஸ்புக்கை லாக் அவுட் செய்யாமல் சென்றதால் திருடிய ஒரு மணி நேரத்தில் பிடிபட்டான். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts