ஃபேஸ்புக்கில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களை பதிவு செய்ய இருந்த தடை நீக்கம்

இதுவரை பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய இருந்த தடையை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கிவிட்டது.

Breastfeeding_a_baby

Free the nipple என்ற அமைப்பு கொடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இயற்கையானது மற்றும் அருமையான ஒரு செயல் என்ற கருத்தை கூறிய Free the nipple அமைப்பின் கோரிக்கையை ஏற்றுள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது. இருப்பினும் இந்த புகைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் உணர்வுகள் மற்றும் அனுபவங்களையும் ஃபேஸ்புக்கில் இனி பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், இதன்மூலம் அனைத்து தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் தாங்கள் கருதுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய முடிவுக்கு Free the nipple அமைப்பு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல நாடுகளில் திடீர் திடீரென டாப்லெஸ் போராட்டங்கள் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

Related Posts