ஃபேஸ்புக்கில் தமிழில் பாடல் குறிப்பு எழுதிய ஏ.ஆர். ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஃபேஸ்புக்கில் எப்போதும் ஆங்கிலத்தில்தான் பதிவுகள் எழுதுவார். இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படத்தின் ராசாளி பாடல் பற்றிய குறிப்பை தமிழில் எழுதியுள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியதாவது:

அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய ‘ராசாளி’ பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டுசெல்லும் சிறு முயற்சி இது. புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும்போது கிடைக்கும் அனுபவம் இது.

ராசாளி பாடல்

Related Posts