தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, 21ஆம் திகதி செப்டெம்பர் மாதம் நடந்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கட்சி வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
‘பிரபாகரனின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 26 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம். அவர் ஓர் உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். நாம் இந்தப் பாணியில் எமது தேர்தல் பிரசாரத்தை செய்யவில்லை.
ஸ்ரீதரன் கூட இவ்வகையில் பிரசாரம் செய்யவில்லை. எமக்கு முன்னரே தெரிந்திருந்தால் நாம் இதை அனுமதித்திருக்க மாட்டோம்’ என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
‘இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. நாம் இதில் தெளிவாக உள்ளோம்’ எனவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி