யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் காது,மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் மீது வாள் வெட்டு மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் மீதான வாள்வெட்டு சம்பவம் கந்தர்மடம் சந்தியில் கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரையே பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையிலேயே சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன்; யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.