வெவ்வேறு கொலை சந்தேகநபர்கள் நால்வருக்கு பிணை

judgement_court_pinaiவெவ்வேறு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி நபர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் எஸ்.பரமராஜா முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் 9ஆம் திகதி ஆனந்தபுரம், கல்வியங்காட்டு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் என்பவரை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த குருநாதன் குகநேசன் என்பவருக்கும், உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி இராஜசிங்கம் என்பவரை 2013 ஜனவரி 30ஆம் திகதி அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராசேந்திரம் சசிகரன் என்பவருக்கும், ஊர்காவற்துறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த போரன் ஜேசுதாசன் டெனிஸ் என்பவரை கடந்த 2010 மார்ச் 08ஆம் திகதி கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்தோனி டன்சன் என்பவருக்கும், வவுனியா மதகு வைத்தபுலம் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்வபரை கடந்த 2012 மே 03ஆம் திகதி கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அபேசிங்க முதியான்சிலாகே மைக்கல் பிரதீப் உட்பட நால்வருக்கும் பிணை நிபந்தனையுடன் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் பிணை அனுமதி வழங்கினார்.

Related Posts