வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் மோசடி செய்த பெண் கைது

arrest_1வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் யாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து யாழில் உள்ளவர்களிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கோரி பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் 6 இலட்சத்தில் 67 ஆயிரம் ரூபா பணத்தினை கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததை தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணை விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்

Related Posts