வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

சாவகச்சேரி சரசாலை பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதானா வைத்திசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிற்றிக்கிழமை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரி சரசாலை பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் சாரசாலை மேற்கை சேர்ந்த கந்தசாமி எழில்கரன் என்ற 21 வயதான இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

தோட்டத்தில் வேலை செய்துவிட்டு அதில் உள்ள குப்பைகளை கொழுத்திய போது அதில் இருந்த வெடிக்காத வெடிபொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனாலேயே குறித்த நபர் காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts