விபத்தில் தந்தையும் மகளும் படுகாயம்

யாழ். வேம்படி சந்தியில் தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில் யாழ். வேம்படி சந்தியில் இடம்பெற்றது.கன்னியர்மடம் வீதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையும் மகளும், சந்தியை கடக்க முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts