யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆணைக்கோட்டை வடக்கைச் சேர்ந்த கனகரத்தினம் பிரதீப் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி பாலத்தில் நேற்று புதன்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.