விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காணாமல் போயுள்ளார்! வல்வை பொலிஸில் புகார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமல் போயுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

புனர்வாழ்வளிக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்த சிவசம்பு பிரசாத் (24) என்ற போராளியே இவ்வாறு காணாமல் போயுள்ளவராவார்.

குறித்த நபர் காணாமல் போயுள்ளமை குறித்து அவரது உறவினர்களால் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பிற்கு சென்ற போதே காணாமல் போயுள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts