யாழ்.கொட்டடிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப்படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவினரை கைது செய்வதற்காக சென்ற போதே இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒரு விசேட அதிரடிப்படை வீரர் காயமடைந்ததோடு, இத்தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
காயமடைந்த விசேட அதிரடிப்படை வீரர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.