விசுவமடுவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை!

முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts