வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; 3 வாள்கள் மீட்பு

policeericpereraaகாது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்தேக சபரின் வீட்டில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா தெரிவித்தார். 

யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்றய தினம் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த  20 ஆம் திகதி கந்தர் மடம் பகுதியில் வைத்து காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் பி.திருமாறன் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் இடம்பெற்று சில நாட்களின் பின்பு சந்தேகத்தின் பேரில் யாழ். நகரப்பகுதியில் இருந்து ஒருவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணையின் போது, 3 வாள்கள் அவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டப்பட்டதுடன்;, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவiர் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Posts