வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ள பல்கலை. மாணவர்கள்!

“ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு பெப்ரல் அமைப்பினால் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், ருகுணு மற்றும் களனி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தூரப்பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் இந்த பிரச்சினையை எதிர்நோக்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக வேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Related Posts